சார்லீஸ் ஏஞ்சல்ஸ், கில் பில் படங்களில் தனது அதிரடி நடிப்பால் அசத்திய ஆசியா பியூட்டி லூசி லு விரைவில் இந்தியா வருகிறார். ஹாலிவுட் நடிகை லிண்ட்ஸே லோகனை பின்பற்றி இவரும் டாக்குமெண்ட்*ரி ஒன்றிற்காக இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

லிண்ட்ஸே லோகன் சமீபத்தில் இந்தியா வந்தார். வந்ததன் நோக்கம் பிபிசி-க்காக ஒரு டாக்குமெண்ட்*ரியில் பங்குபெற. இந்திய மீடியாக்கள் இந்த விஜயத்தை புராண அவதாரத்தின் வருகைக்கு நிகராக கொண்டாடின. ஆனால் அவர் வந்தது இந்தியாவின் ஏழ்மை மற்றும் குழந்தைகளின் அவலநிலை குறித்த டாக்குமெண்ட்*ரிக்காக.

லூசி லு-வும் இப்படியொரு டாக்குமெண்ட்*ரிக்காகவே இந்தியா வரவிருக்கிறாராம். அவர் லேண்ட் ஆகப்போவது மும்பை என்கின்றன செய்திகள்.