Results 1 to 2 of 2

Thread: ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும

  1. #1
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும



    மலையாளப் படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழர்கள் இழிவாகச் சித்த*ரிக்கப்படுவது ஒரு பேஷனாகிவிட்டது. திரைப்படங்களில் இந்த மனோபாவம் எப்படி வெளிப்படுகிறது என்று மலையாளப் படங்களில் தமிழர் சித்த*ரிப்புகள் என்ற கட்டுரையில் (2008 மார்ச்) வ
    ி*ரிவாக எழுதியிருந்தோம். இந்த இரண்டு வருடங்களில் இந்த வியாதி மலையாள திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் படர்ந்து பந்தலித்துள்ளது.

    மலையாள சேனல்கள் ஒளிபரப்பும் காமெடி நிகழ்ச்சிகளில் தமிழ் அடையாளம் அதிக அளவில் நையாண்டிக்குள்ளாகிறது. குறிப்பாக அவர்களின் தோற்றம். கருப்பு பெயின்ட் பூசப்பட்டவனையே தமிழன் என்று காட்டுகிறார்கள். பிச்சையெடுப்பவன், குறி சொல்கிறவன், அம்மி கொத்துகிறவன், நாக*ரிகமில்லாத குடிகாரன் இவர்களே தமிழர்களாக சித்த*ரிக்கப்படுகிறார்கள்.



    இதன் தொடர்ச்சியாக*தான் நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். ஜெயராம் சொன்னது உண்மை. தமிழர்களின் அடையாளம்தான் இன்று மலையாள தொலைக்காட்சிகளில் காமெடிக்கான கருப்பொருள்.

    சிங்களனுக்கு தமிழர்கள் மீதுள்ள வன்மத்தைப் பற்றி குறிப்பிடும் ஊடகவியலாளர் ஒருவர், தமிழர்களின் படிப்பும், அறிவும், உழைப்பும், முன்னேற்றமும் சிங்களனுக்கு ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மைதான் அவனுக்குள் தமிழர் மீதான வன்மத்தை ஊட்டி வளர்த்தது என்கிறார். தமிழ*ரின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகத்தை அவன் தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை இதற்கு உதாரணமாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

    மலையாளிகளின் தமிழ் அடையாளங்கள் மீதான தாக்குதலும் தாழ்வு மனப்பான்மையின் பாற்பட்டதே. திரைத்துறையைப் பொறுத்தவரை செல்வராகவன், சேரன், பாலா, அமீர், சசிகுமார், வசந்த பாலன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இள ரத்தம் மலையாளத்தில் பாயவேயில்லை. ஜெயராமே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என 25 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றும் அங்கு முன்னணி நட்சத்திரங்கள். வீ*ரியமான அடுத்த தலைமுறை அங்கு கருக்கொள்ளவேயில்லை. திலீப்பை தவிர மற்றவர்கள் உதி*ரிகளே.

    ஆனால் தமிழில் அ*ஜித், விஜய், விக்ரம், சூர்யா என்ற அடுத்த தலைமுறையும், தனுஷ், சிம்பு, பரத், நகுல் என்ற அதற்கு அடுத்த தலைமுறையும் வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இசை, ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி, நடனம், எடிட்டிங், கிராஃபிக்ஸ் என எல்லா*த் துறைகளிலும் தமிழில் பிரவாகிக்கும் ஓட்டத்தையும், கேரளாவில் மந்தமான தேக்கத்தையும் நாம் காணலாம்.

    தமிழில் வெளியாகும் படங்கள் அதே நாள் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதும், தமிழ் திரையிசைப் பாடல்கள் கேரளா முழுவதும் ஆர்வத்துடன் ரசிக்கப்படுவதும் இன *ரீதியாக மலையாளிகளை தூண்டக் கூடியதே. சூப்பர் சிங்கர் தொடங்கி மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்துப் பாடல், ஆடல் நிகழ்ச்சிகளில் தமிழ் திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு நம்ப முடியாதது. சராச*ரி ரசிகனின் மனதில் மலையாளப் பாடல்களைவிட தமிழ் திரையிசைப் பாடல்களுக்கே அதிக இடம் என்பது மலையாள அறிவு**ஜீவிகளால் *ஜீரணிக்க முடியாத விஷயம்.

  2. #2
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும

    மேலும், முதல்தர கல்வி முதல் மருத்துவம் வரை அனைத்துக்கும் அவர்கள் தமிழக எல்லையை*த் தாண்ட வேண்டியுள்ளது. ஜெயராம், மம்முட்டி முதலான மலையாள சூப்பர் ஸ்டார்களின் குழந்தைகள் சென்னையில்தான் வசிக்கின்றன, கல்வி கற்கின்றன. நகையை தவிர்த்து பட்டுக்கும், பச்சைக் காய்கறிக்கும் அவர்கள் தமிழக எல்லையை கடந்தாக வேண்டும். கேரளா தமிழ்நாட்டின் பச்சைக் காய்கறியை நம்பியிருக்கக் கூடாது என்று மோகன்லாலின் படத்தில் வசனமே உண்டு. இதை முன்னிறுத்தி படங்களும் வெளிவந்துள்ளன.

    தமிழர்களுக்கு மலையாளிகள் என்பவர்கள் பிழைப்புக்காக எல்லை தாண்டி வந்து டீக்கடை வைத்திருப்பவர்கள். திரைப்படங்களில் காமெடிக்காக சேர்க்கப்படும் கவர்ச்சி ஊறுகாய். ஆனால் மலையாளிகளுக்கு? அன்றாட வாழ்க்கையில் தெருவில், வீட்டில், அலுவலகத்தில், திரையரங்கில், தொலைக்காட்சியில் எங்கும் எதிலும் அவர்கள் ஈகோவை உரசிப் பார்க்கும் வெற்றிகொள்ள முடியாத பேராளுமை. தமிழனின் இருப்பு ஒவ்வொரு கணமும் அவனை பதற்றத்தில் தள்ளுகிறது.

    இந்த ஆற்றாமைதான் கிண்டலாக நையாண்டியாக குரூரமான முறையில் வெளிப்படுகிறது. பிழைப்புக்காக கேரள எல்லை தாண்டும் விளிம்புநிலை தமிழர்களான பிச்சைக்காரர்களை, அம்மி கொத்துகிறவர்களை, குறி சொல்கிறவர்களை காணும் போது மலையாளியின் ஈகோ குஷியாகிறது. இதுதான் தமிழன் என்று கைகொட்டி சி*ரிக்கிறது, அடுத்தவனுக்கு சுட்டிக் காட்டுகிறது. ஜெயராமின் வாயிலிருந்து தெறித்த வார்த்தைகளும் இதுதான்.

    அன்றாட வாழ்க்கைக்கும் அதன் சௌக*ரியத்துக்கும் தமிழனுக்கு மலையாளியின் தயவு தேவையில்லை. ஆனால் மலையாளிக்கு தமிழனின்றி ஒரு பருக்கையும் வேகாது. இதை அவன் நன்கு உணர்ந்து இருக்கிறான். இந்த தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் ஈகோவை ச*ரி செய்ய தமிழனின் பலவீனமான பகுதிகளை அவன் கிண்டல் செய்கிறான். பகட்டான அரசியல், துதி பாடும் சினிமாத்துறை, சுகாதாரமற்ற தெருக்கள், சாலையை பொதுக் கழிப்பிடமாக்கும் மனிதர்கள் என்று நமது பலவீனங்களைத் தேடித் தேடி நையாண்டி செய்கிறான். அதன் ஒரு பகுதிதான் கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி. (மேனி பளபளப்பால் சில மலையாள நடிகைகள் மட்டும் தமிழில் வெற்றிகரமாக வண்டி ஓட்டியிருக்கிறார்கள். நம் பெண்கள் அழகு என்ற இறுமாப்பும் சேர்ந்ததுதான் ஜெயராமின் தமிழ் பெண்கள் பற்றிய இந்த வாந்தி).

    இந்த தருணத்தில் நாம் கொள்ள வேண்டியது கோபமல்ல. நமது பலவீனங்களை களைந்து மலையாளிகளின் ஈகோவை மேலும் தீயாக தூண்டிவிடுவதுதான். சொறிந்து கொள்ள தமிழனின் பலவீனங்கள் அகப்படாதபோது அவனது ஈகோ எதை பிறாண்டும் என்று பார்க்கவாவது நமது அசட்டுத்தனங்களை ஒழிக்க வேண்டும். மலையாளிகள் மட்டுமல்ல, நம் இனத்துக்கு எதிராக துளிர்விடும் எந்த விஷத்தையும் முறிக்க இதுவே ச*ரியான வழி.

    (பி.கு. தடித்த கறுத்த ஒல்லியான பல் நீண்ட தமிழ்நாட்டு கிராமத்துப் பெண்களை ஜெயராமைவிட கேவலமான மொழியில் நமது தமிழ்த் திரைப்படங்கள் கேலி செய்துள்ளன. இந்த புற அடையாளங்களை கேலி செய்வதற்கென்றே நகைச்சுவை காட்சிகளை திரைப்படங்களில் நாம் திணித்திருக்கிறோம். அப்போதெல்லாம் நாம் கோபம் கொண்டதில்லை, யாருடைய வீட்டிலும் கல் எறிந்ததில்லை. இதன் பொருள் என்ன? தமிழச்சியை தமிழன் கேவலப்படுத்தலாம், பிற இனத்தவனுக்கு மட்டும் அந்த உ*ரிமை இல்லை என்பதா? மலையாளிகள் தங்கள் இனத்துப் பெண்களை தமிழர்களைப் போல திரைப்படங்களில் கொச்சைப்படுத்துவது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நாம் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •