Results 1 to 1 of 1

Thread: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஒரு அட்&

  1. #1
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஒரு அட்&

    சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. அதில் அதீத கற்பனைகளை நிகழ்கால உண்மைகளுடன் சுவாரஸியப்படுத்தி தருவது இயக்குனர் சிம்புதேவனின் ஸ்டைல். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 365ல் கடவுள் படங்களை*த் தொடர்ந்து இவர் இயக்கியிருக்கும் படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். 38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் உருவாகியிருக்கும் இந்த கௌபாய் படத்தைப் பற்றி அவர் பேசக் கேட்பதே தனியான அனுபவம்.

    கௌபாய் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

    பேண்டசி படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. சின்ன வயசில் படித்த காமிக்ஸ் புத்தகங்களின் நினைவு இன்றும் எனக்குள் பிரமிப்பா இருக்கு. அந்த பிரமிப்பு எல்லோருக்குள்ளும் இருக்கும்னு நான் நம்பறேன். நாம் சிறுவர்களாக இருந்த போது கேட்ட கதைகள் அனைத்துமே கற்பனை கலந்த கதைகள்தான். அதிலிருக்கும் பயம் கலந்த த்*ரில் எனக்குப் பிடித்த விஷயம். நான் பார்த்த வெளிநாட்டுப் படங்களும், படித்த காமிக்ஸ் புத்தகங்களுமே கௌபாய் படம் எடுக்க காரணம்.

    வெளிநாட்டுக்கு ஒத்துப் போகும் கௌபாய் படம் தமிழுக்கு பொருந்தி வருமா?

    கௌபாய் படங்களின் பூர்வீகம் ஸ்பெயின். அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கு. மேற்கத்திய படங்களின் பாதிப்பு இல்லாமல் கௌபாய் படம் எடுக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனாலும் திரைக்கதையும், உள்ளடக்கமும் நமது மண் சார்ந்ததாகவே இருக்கும். அடிமை முறையை எதிர்த்து போராடும் வீர இளைஞனை பற்றியதுதான் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.



    படங்களுக்கு எப்படி வித்தியாசமான பெயர்களை தேர்வு செய்கிறீர்கள்?

    கதையை தயார் பண்ணிட்டு டைட்டிலை யோசிக்கிறதுதான் என்னோட பாணி. படத்தின் பெயரே கதையை சொல்ற மாதி*ரி இருக்கணும் என்ற அடிப்படையில்தான் பெயர்களை தேர்வு செய்கிறேன். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 365ல் கடவுள் எல்லாம் பெய*ரிலேயே கதையை சொல்லவில்லையா? அதுமாதி*ரிதான் இந்தப் படத்தின் பெயரும்.

    கௌபாய் படத்துக்கு காஸ்ட்யூம், அரங்குகள் என மெனக்கெடல்கள் அதிகம் இருக்குமே?

    இந்த மாதி*ரி கதைகளை ஒரு இயக்குனர் நினைத்தால் மட்டும் உருவாக்க முடியாது. தயா*ரிப்பாளரும் மனது வைக்க வேண்டும். கல்பாத்தி எஸ்.அகோரம் கதையை கேட்டு ஓகே சொன்னதும் இரண்டு மாதங்கள் ஹோம் வொர்க் செய்து, தேவையான பொருட்களை சேக*ரித்து, இடங்களை தேர்வு செய்து அதுக்கப்புறம்தான் படப்பிடிப்புக்கு கிளம்பினோம்.
    Last edited by RenuCK; 01-21-2010 at 10:51 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •