மதூர் பண்டார்க*ரின் சாந்தினி பார், பே*ஜ் 3, ட்ராஃபிக் சிக்னல், ஃபேஷன்... நான்கு படங்கள் 11 தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றன. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட முக்கிய விருதுகள் அடக்கம்.

சென்ற வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகளில் இரண்டை இவரது ஃபேஷன் திரைப்படம் வென்றிருக்கிறது. படத்தில் ஹீரோயினாக நடித்த ப்*ரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், கங்கனா ரனவத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

இந்த அங்கீகாரத்துக்கு காரணம் கடவுளின் ஆசிதான் என்று கூறிய மதூர் பண்டார்கர் புகழ்பெற்ற அ*ஜ்மீர் ஷெ*ரிஃப் தர்காவுக்கு சென்று வழிபட்டார். மேலும், ஃபேஷன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியையும் தெ*ரிவித்துக் கொண்டார்.

தனக்கு விருது கிடைக்காதபோதும் தனது படத்தில் நடித்தவர்களுக்கு கிடைத்த விருதுக்காக தர்காவுக்கு சென்று வழிபட்ட பண்டார்க*ரின் விசால மனசுக்கு என்ன விருது கொடுத்தாலும் தகும்.