மலையாளத்தில் வெளிவந்த ‘நந்தனம்’ தமிழில் ‘சீடன்’ என்ற பெயரில் தயாராகிறது. சுப்பிரமணிய சிவா படத்தை இயக்குகிறார்.

நந்தனம் மலையாளத்தில் இருவரை அறிமுகப்படுத்தியது. நவ்யா நாயர், ப்ருத்விராஜ். ரேவதியின் அம்மா வீட்டில் வேலைக்காரியாக வந்து சேர்கிறார் நவ்யா. கடவுள் பக்தி நிரம்பியவர். அவர் வந்த நேரம் ரேவதியன் மகன் ப்ருத்விராஜும் விடுமுறைக்காக அங்கு வருகிறார். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது.

கணவனை இழந்த ரேவதிக்கு நவ்யாவை மருமகளாக்கிக் கொள்ள எந்த மனத்தடங்கலும் இல்லை. ஆனால், சொந்தங்களால் பிரச்சனை வருகிறது. குருவாயூரப்பனே அந்த அப்பாவி வேலைக்கார பெண்ணுக்கு காட்சி தந்து நம்பிக்கை தருகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இந்தப் படத்தில் குருவாயூரப்பனாக நடித்தவர் ஆகாஷ் அரவிந்த். அவர் நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் தனுஷ். நவ்யா வேடத்தில் அனன்யா. ப்ருத்விராஜ் நடித்த வேடத்தை யார் செய்யப் போகிறார் என்பது கேள்விக்குறி.

ரேவதி நடித்த அம்மா கதாபாத்திரத்தை சுஹாசினி ஏற்றிருக்கிறார். சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் அரங்கு அமைத்து படத்தை எடுக்கயிருக்கிறார்கள்.