ரன் படத்துக்காக யாரையும் இமிடேட் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் அமிதாப்பச்சன்.

பா படம் கொடுத்த புகழ் இன்னும் தனது பிரகாசத்தை இழக்கவில்லை. அதற்குள் அந்தப் படத்துக்கு நேர் எதிரான கதாபாத்திரத்துடன் ரசிகர்களை சந்திக்கிறார் அமிதாப். படம், ரன்.

ராம்கோபால் வர்மா ரன் படத்தை இயக்கியிருக்கிறார். மீடியாவை பற்றிய படம் இது. வர்மாவுக்கும் மீடியாவுக்கும் ஒருபோதும் ஒத்துப் போனதில்லை. வர்மாவின் தோல்விகளை பூதாகரப்படுத்தியதில் மீடியாக்களுக்கு கணிசமான பங்குண்டு.

ஆகவே வர்மா எடுக்கும் மீடியாவைப் பற்றிய படம் மீடியாவுக்கு எதிரானதாக இருக்கும் என்றொரு கருத்து ஆங்கில டிவி சேனல்களுக்கு இருக்கிறது. படத்தை பதம் பார்க்க அவை இப்போதே தயாராகிவிட்டன.

இந்நிலையில் மீடியாக்களின் இந்த கருத்துக்கு மறுப்பு தெ*ரிவித்திருக்கிறார் அமிதாப். உண்மையில் ரன் மீடியாவுக்கு ஆதரவான படம் என்று தெ*ரிவித்திருப்பவர், படத்தில் அவர் செய்யும் அனைத்து வேலைகளும் மீடியாவுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றும் தெ*ரிவித்துள்ளார்.

அதுபோல் டிவி பிரபலங்களான பிரணாய் ராய், ரா*ஜ்தீப் சர்தேசி ஆகியோரை இமிடேட் செய்து ரன்னில் அமிதாப் நடித்திருக்கிறார் என்ற வாந்தியையும் அவர் மறுத்துள்ளார்.

“நான் ஏற்று நடித்திருக்கும் விஜய் ஹர்ஷ்வர்தன் மாலிக் கேரக்ட*ரில் யாரையும் இமிடேட் செய்யவில்லை. நானே புதிதாக முயற்சி செய்து நடித்திருக்கிறேன்” என்று தெ*ளிவுபடுத்தியுள்ளார்.

ரன் வரும் 29ஆ*ம் தே*தி திரைக்கு வருகிறது.