மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் எழுதிய குறு நாவல் மதிலுகள். *சிறையைப் பற்றிய இந்தக் கதையை 1989ல் திரைப்படமாக்கினார் அடூர் கோபால கிருஷ்ணன். மம்முட்டி இதில் பஷீராக நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

மதிலுகளின் தொடர்ச்சியாக மதிலுகளுக்கப்புறம் என்றப் படத்தை தனது பிளே ஹவுஸ் நிறுவனம் சார்பில் மம்முட்டி தயா*ரிக்கிறார். படத்தில் பிரதான வேடத்தில் மம்முட்டியே நடிக்கவும் செய்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் வித்யா பாலன்.

கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் வித்யா பாலன் இதுவரை மலையாளப் படத்தில் நடித்ததில்லை. இதுவே அவர் நடிக்கும் முதல் மலையாளப் படம்.