3 இடியட்ஸ் படத்தின் வசூலை முறியடிக்கும் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் வெளியான முதல் வாரத்திலேயே ஒரு கோடியை தாண்டி சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனைக்கெல்லாம் சொந்தக்காரர் சிவசேனாவால் தடை செய்யப்பட்ட மை நேம் இஸ் கான்.

வெள்ளிக்கிழமை மும்பையில் சில திரையரங்குகளில் மட்டும் இப்படம் வெளியானது. சனிக்கிழமை பல திரையரங்குகளில். ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்ட அனைத்து திரையரங்குகளிலும் படம் வெளியானது. வசூலிலும் இந்த மாற்றத்தை*க் காண முடிந்தது.

வெள்ளிக்கிழமை இந்தியா முழுவதும் இப்படம் எட்டு கோடிகளை வசூலித்தது. சனிக்கிழமை 11.06 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை 14.14 கோடிகள். ஆக, முதல் மூன்று தினங்களில் 33.20 கோடிகளை வசூலித்துள்ளது.

படத்துக்கு கிடைத்துவரும் ரசிக ஆதரவைப் பார்க்கும் போது இதுவரை வந்த அனைத்து இந்திப் படங்களின் வசூலை இது முறியடிக்கும் என்கிறார்கள்.