சமீபத்தில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகியிருக்கிறார் நவ்யா நாயர். திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று அவர் ஸ்டேட்மெண்ட் எதுவும் தரவில்லை. ஆனாலும், திருமதிகள் தமிழ் சினிமாவுக்கு அலர்*ஜியாயிற்றே. நவ்யா நடிக்கயிருந்த ஒரு படத்தில் அவரை தூக்கிவிட்டு மோனிகாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

சஞ்சய் ராம் பூவா தலையா, சுர்லா என்று பல படங்களை அண்டர் புரொட*க்சனில் வைத்திருக்கிறார். அத்துடன் கவுரவர்கள் என்ற படத்துக்கும் பூர்வாங்க வேலைகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் நவ்யா. போட்டோசெஷனும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நவ்யாவுக்கு திருமணமாகவே அவரை நீக்கிவிட்டு மோனிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார். மோனிகா நடித்த வர்ணம், அகாராதி படங்கள் படப்பிடிப்பு முடிந்தும் பல மாதங்களாக திரைக்கு வராமல் தத்தளிக்கின்றன. இந்நிலையில் அவர் கால்ஷீட் கொடுத்திருக்கும் படம்தான் கவுரவர்கள்.

பூவா தலையா, சுர்லா அப்புறம் கவுரவர்கள்.. ஆவ், பல வருஷம் ஆகும் போலிருக்கே.