சௌந்தர்யா ர*ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ தயா*ரிப்பில் வெளிவரும் முதல் படம். வெங்கட்பிரபுவின் மூன்றாவது படைப்பு.



வெங்கட்பிரபுவின் முதலிரண்டு படங்களில் நடித்தவர்களே இதிலும். பிரேம்*ஜி, ஜெய், ஆகாஷ், அரவிந்த், வைபவ் இவர்களுடன் பியா, பெலினி ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் வெளிநாட்டு நடிகையான பெலினி பிரேம்*ஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தேனியிலிருந்து கோவாவுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் காதல் அனுபவமும் அதனால் உருவாகும் மோதலுமே கதை. கோவாவில் வசிக்கும் பணக்கார வீட்டு*ப் பெண்ணாக சினேகா நடித்திருக்கிறார். மாடர்ன் ட்ரெஸ்ஸில் இதுவரை பார்க்காத சினேகாவை இதில் பார்க்கலாம் என்கிறார் வெங்கட்பிரபு.

பிகினி காட்சிகள் நிறைய என்பதால் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன், வெங்கட்பிரபு, பிரேம்*ஜி, கார்த்திக் ராஜா, பவதா*ரணி இணைந்து பாடியிருக்கும் குடும்பப் பாடலும் படத்தில் உள்ளது. வாலி, கங்கை அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.