-
யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ்
தொடர்ந்து ஆறு வாரங்களாக அவதார் முதலிடத்தில் உள்ளது. யுஎஸ்ஸை பொறுத்தவரை இதுவரை வெளிவந்தப் படங்களில் டைட்டானிக்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளது அவதார். இன்னும் இரண்டு வாரங்களில் அவதார் முதலிடத்தைப் பிடிக்கும் சாத்தியமுள்ளது.
5. தி லவ்லி போன்ஸ்
ஐந்தாவது இடத்தில் தி லவ்லி போன்ஸ். சென்ற வார இறுதியில் இப்படம் 8.42 மில்லியன் அமெ*ரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் வசூலித்துள்ளது 31.2 மில்லியன் டாலர்கள்.
4. டூத் ஃபய*ரி
டூத் ஃபய*ரி நான்காவது இடத்தில். சென்ற வாரம் வெளியான இப்படம் தனது ஓபனிங்காக சம்பாதித்திருப்பது 14 மில்லியன் டாலர்கள்.
3. தி புக் ஆஃப் ஏலி
மூன்றாவது இடத்தில் தி புக் ஆஃப் ஏலி. சென்ற வார இறுதியில் 15.7 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை 60.7 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
2. *லீ*ஜி*ய*ன்
இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் வார இறுதி வசூல் 17.5 மில்லியன் டாலர்கள்.
1. அவதார்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தொடர்ந்து முதலிடத்தில். சென்ற வார இறுதியில் இப்படம் 34.9 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. ஆறு வார முடிவில் இதன் யுஎஸ் வசூல், 552 மில்லியன் அமெ*ரிக்க டாலர்கள். டைட்டானிக்கை முந்த இனி 49 மில்லியன் டாலர்கள் மட்டுமே அவதாருக்கு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks