வீட்டில் சும்மா இருக்கிறார்களே என்று நடிக்கக் கூப்பிட்டல் சில நடிகர்கள் தங்களது விலை தெ*ரியாமல் வில்லங்கம் செய்வதை என்னவென்பது. அப்படி*த்தான் அருண் விஜய் சும்மா இருந்தபோது துணிச்சல் என்ற படத்தில் அவரை நடிக்க வைத்தார்கள். படத்தை வாங்க ஈ காக்கா இல்லை.

கஷ்டப்பட்டு ஒரு வழியாக படத்தை வெளியிட தயா*ரிப்பாளர் முயன்ற போது டப்பிங் பேசமாட்டேன் என்று முரண்டு பிடித்தார் அருண் விஜய். சம்பள பாக்கியாம். நஷ்டத்தில் இருந்த தயா*ரிப்பாளர் வேறொருவரை டப்பிங் பேச வைத்து படத்தை வெளியிட்டார்.

இதேபோலொரு சம்பவம் சிவப்பு சாமி படத்திலும் நடந்திருக்கிறது. த்*ரிஷா தெலுங்கில் நடித்தப் படத்தை தமிழில் சிவப்பு சாமி என்ற பெய*ரில் வெளியிடுகிறார்கள். இதில் சத்யராஜும் நடித்திருக்கிறார்.

அவரது கேரக்டருக்கு டப்பிங் பேசித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். சத்யரா**ஜ் இதற்கு லம்பாக ஒரு அமௌண்ட் கேட்டதாக***த் தெ*ரிகிறது. அப்படியா சேதி என்று மிமிக்கி*ரி கலைஞர் ஒருவரை சத்யரா**ஜ் போல பேச வைத்து டப்பிங்கை முடித்திருக்கிறார்கள்.

ஆக, மிமிக்கி*ரி வாய்சில் வரவிருக்கிறது சிவப்பு சாமி.