-
ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும
மேலும், முதல்தர கல்வி முதல் மருத்துவம் வரை அனைத்துக்கும் அவர்கள் தமிழக எல்லையை*த் தாண்ட வேண்டியுள்ளது. ஜெயராம், மம்முட்டி முதலான மலையாள சூப்பர் ஸ்டார்களின் குழந்தைகள் சென்னையில்தான் வசிக்கின்றன, கல்வி கற்கின்றன. நகையை தவிர்த்து பட்டுக்கும், பச்சைக் காய்கறிக்கும் அவர்கள் தமிழக எல்லையை கடந்தாக வேண்டும். கேரளா தமிழ்நாட்டின் பச்சைக் காய்கறியை நம்பியிருக்கக் கூடாது என்று மோகன்லாலின் படத்தில் வசனமே உண்டு. இதை முன்னிறுத்தி படங்களும் வெளிவந்துள்ளன.
தமிழர்களுக்கு மலையாளிகள் என்பவர்கள் பிழைப்புக்காக எல்லை தாண்டி வந்து டீக்கடை வைத்திருப்பவர்கள். திரைப்படங்களில் காமெடிக்காக சேர்க்கப்படும் கவர்ச்சி ஊறுகாய். ஆனால் மலையாளிகளுக்கு? அன்றாட வாழ்க்கையில் தெருவில், வீட்டில், அலுவலகத்தில், திரையரங்கில், தொலைக்காட்சியில் எங்கும் எதிலும் அவர்கள் ஈகோவை உரசிப் பார்க்கும் வெற்றிகொள்ள முடியாத பேராளுமை. தமிழனின் இருப்பு ஒவ்வொரு கணமும் அவனை பதற்றத்தில் தள்ளுகிறது.
இந்த ஆற்றாமைதான் கிண்டலாக நையாண்டியாக குரூரமான முறையில் வெளிப்படுகிறது. பிழைப்புக்காக கேரள எல்லை தாண்டும் விளிம்புநிலை தமிழர்களான பிச்சைக்காரர்களை, அம்மி கொத்துகிறவர்களை, குறி சொல்கிறவர்களை காணும் போது மலையாளியின் ஈகோ குஷியாகிறது. இதுதான் தமிழன் என்று கைகொட்டி சி*ரிக்கிறது, அடுத்தவனுக்கு சுட்டிக் காட்டுகிறது. ஜெயராமின் வாயிலிருந்து தெறித்த வார்த்தைகளும் இதுதான்.
அன்றாட வாழ்க்கைக்கும் அதன் சௌக*ரியத்துக்கும் தமிழனுக்கு மலையாளியின் தயவு தேவையில்லை. ஆனால் மலையாளிக்கு தமிழனின்றி ஒரு பருக்கையும் வேகாது. இதை அவன் நன்கு உணர்ந்து இருக்கிறான். இந்த தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் ஈகோவை ச*ரி செய்ய தமிழனின் பலவீனமான பகுதிகளை அவன் கிண்டல் செய்கிறான். பகட்டான அரசியல், துதி பாடும் சினிமாத்துறை, சுகாதாரமற்ற தெருக்கள், சாலையை பொதுக் கழிப்பிடமாக்கும் மனிதர்கள் என்று நமது பலவீனங்களைத் தேடித் தேடி நையாண்டி செய்கிறான். அதன் ஒரு பகுதிதான் கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி. (மேனி பளபளப்பால் சில மலையாள நடிகைகள் மட்டும் தமிழில் வெற்றிகரமாக வண்டி ஓட்டியிருக்கிறார்கள். நம் பெண்கள் அழகு என்ற இறுமாப்பும் சேர்ந்ததுதான் ஜெயராமின் தமிழ் பெண்கள் பற்றிய இந்த வாந்தி).
இந்த தருணத்தில் நாம் கொள்ள வேண்டியது கோபமல்ல. நமது பலவீனங்களை களைந்து மலையாளிகளின் ஈகோவை மேலும் தீயாக தூண்டிவிடுவதுதான். சொறிந்து கொள்ள தமிழனின் பலவீனங்கள் அகப்படாதபோது அவனது ஈகோ எதை பிறாண்டும் என்று பார்க்கவாவது நமது அசட்டுத்தனங்களை ஒழிக்க வேண்டும். மலையாளிகள் மட்டுமல்ல, நம் இனத்துக்கு எதிராக துளிர்விடும் எந்த விஷத்தையும் முறிக்க இதுவே ச*ரியான வழி.
(பி.கு. தடித்த கறுத்த ஒல்லியான பல் நீண்ட தமிழ்நாட்டு கிராமத்துப் பெண்களை ஜெயராமைவிட கேவலமான மொழியில் நமது தமிழ்த் திரைப்படங்கள் கேலி செய்துள்ளன. இந்த புற அடையாளங்களை கேலி செய்வதற்கென்றே நகைச்சுவை காட்சிகளை திரைப்படங்களில் நாம் திணித்திருக்கிறோம். அப்போதெல்லாம் நாம் கோபம் கொண்டதில்லை, யாருடைய வீட்டிலும் கல் எறிந்ததில்லை. இதன் பொருள் என்ன? தமிழச்சியை தமிழன் கேவலப்படுத்தலாம், பிற இனத்தவனுக்கு மட்டும் அந்த உ*ரிமை இல்லை என்பதா? மலையாளிகள் தங்கள் இனத்துப் பெண்களை தமிழர்களைப் போல திரைப்படங்களில் கொச்சைப்படுத்துவது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நாம் யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்)
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks