பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி ஜோடி பி*ரிகிறது. இருவரும் தங்களது ஆறு குழந்தைகள் மற்றும் 330 மில்லியன் டாலர் சொத்துகளை பி*ரிப்பது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள் என்று சென்ற வாரம் முழுவதும் மீடியாக்களில் டமாரம் அடித்தார்கள் (இதில் நாமும் சேர்த்தி). இந்த கிசுகிசுக்களுக்கு பிராட், ஜோலி தம்பதி முற்றுப் புள்ளி வைத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நக*ரில் நடைபெற்ற டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெ*ரிக்க அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்த தம்பதி முன்பிருந்த அதே காதல் மற்றும் நெருக்கத்துடன் கலந்து கொண்டது. அவர்களுக்குள் மனஸ்தாபம் இருப்பதற்கான எந்த*த் தடயமும் இல்லை.

பத்தி*ரிகையாளர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் இந்த காட்சி ஆச்ச*ரியப்படுத்தியது. டைரக்டர் குயெ*ண்டின் டொரண்டினோவின் அழைப்பின் பே*ரில் இந்த விழாவில் பிராட் பிட் கலந்து கொண்டார். டொரண்டினோவின் இன்குளோ*ரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தில் பிராட் பிட் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.