தமிழில் வெளியாகும் படத்தை அப்படியே தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ஆந்திராவுக்கு தள்ளிவிடுவது வழக்கமாக நடப்பதுதான். வெற்றி பெற்ற படங்களை மட்டும் முன்பு மொழிமாற்றம் செய்தார்கள். அந்த*க்காலம் மலையேறிவிட்டது. சுமாரான படங்களுக்கும் இப்போது சொகுசான வரவேற்பு.

தமிழில் சுமாராகப் போன நாணயம் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இதற்காகும் செலவைவிட இரு மடங்கு இந்த மொழிமாற்றம் சம்பாதித்து கொடுக்கும் என்பது ஆரோக்கியமான விஷயம்.

தெலுங்கில் நாணயத்துக்கு பத்மவியூகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பத்மவியூகத்தை உடைத்து உள் நுழைந்த அபிமன்யுவால் அதைவிட்டு வெளியேறும் வழி தெ*ரியாமல் மரணத்தைத் தழுவ நேர்ந்தது. பெயர் வைத்தவர்களுக்கு இந்த புராண*க் கதை தெ*ரியுமா?