தெலுங்குப் படித்து வருகிறார் கார்த்தி. நேரடித் தெலுங்குப் படங்களில் நடிக்கப் போகிறாரா? இப்போதைக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. பிறகு?

தெலுங்கில் ஆயிரத்தில் ஒருவனை யுகனிக்கி ஒக்கடு என்ற பெய*ரில் வெளியிட்டார்கள். ஒரே வாரத்தில் ஆந்திரா முழுவதும் 1.78 கோடிகளை படம் வசூலித்தது. இந்த வரவேற்பை எதிர்பார்க்காதவர்கள் ஆந்திராவுக்கே சென்று படத்தை புரமோட் செய்திருக்கிறார்கள். தமிழில் விமர்சனத்தை மட்டுமே எதிர்கொண்டவர்களை இந்த மெகா கலெ**க்சன் ஆற்றுப்படுத்தியிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கார்த்தியின் பருத்தி வீரனையும் தெலுங்கில் டப் பண்ணும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் பெயரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ப*ல்ந*ட்டி *வீருடு.

இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காக*த்தான் தெலுங்கு கற்று வருகிறார் கார்த்தி. இதற்குப் பெயர்தான் ஈடுபாடு.