ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் கார் நேற்றிரவு மர்ம நபர்களால் நொறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அ*ஜீத் ரசிகர்கள்தான் காரணம் என்று ஜாக்குவார் தங்கம் தரப்பில் குற்றம்சாற்றுகிறார்கள்.

அ*ஜீத், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் மிரட்டுறாங்க என்று புகார் கூறினார். இது திரையுலகில் உள்ள பலரை ஆத்திரப்பட வைத்தது. முக்கியமாக சங்க நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாக அ*ஜீத்தின் கருத்தை மறுத்ததோடு அவர் மீது ஆத்திரத்துடன் உள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரபல அரசியல் வார இதழ் ஜாக்குவார் தங்கம், ராதாரவி இருவரையும் பேட்டி கண்டு வெளியிட்டது. இதில் கடுமையான வார்த்தைகளால் அ*ஜீத்தை விமர்சித்திருந்தார் ஜாக்குவார் தங்கம்.

“நேத்து வந்த அ*ஜீத் பங்களா கட்டலாம், அஞ்சு கோடி ரூபா கார்ல வரலாம். 60 வருஷமா உழைச்சு உழைச்சு நொந்து போயிருக்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் மூலமா வீடு கிடைச்சிடக் கூடாது. இப்படிப்பட்ட ஹீரோக்கள்ட்ட தொழிலாளர்கள் சுயம*ரியாதை இல்லாம மண்டய சொறிஞ்சுகிட்டு நிக்கணும் என்கிற ஆணவம் அ*ஜீத்துக்கு. அதனாலதான் நன்றி தெ*ரிவிக்கிற ஒரு விழாவுல இப்படி நாக*ரீகம் இல்லாம பேசியிருக்கார். தமிழ் மண்ணுல இருக்க... தமிழ் மக்கள் பணத்துல வாழ்ற... தமிழ்நாட்டு சோறு சாப்பிடுற... ஆனா தமிழக மக்களோட முக்கிய பிரச்சனையான காவி*ரி பிரச்சனைக்கு போராட வரமாட்ட, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கிற கொடுமையை உணர்வுபூர்வமா கண்டிக்க நடந்த கூட்டத்துக்கு வரமாட்டேன்னு சொன்னீங்க. உலக தமிழர்கள் ஏகன் படத்தை வெளியிட மாட்டோம்னு கொந்தளிக்கவும் அந்த கூட்டத்துக்கு உன் தொழில் பாதுகாப்பாக இருக்கணும்னு ஓடி வந்த. உன் சுயநலத்துக்காக நீயா வந்திட்டு மிரட்டி கூப்பிட்டாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லதை சொல்றவனா இருக்கணும். எம்.**ஜி.ஆர். சிகரெட் குடிச்சா நடிச்சார்? சிகரெட் குடிச்சு நடிச்சா அதை இளைஞர்கள் பின்பற்றுவாங்களேன்னு உன் சொந்தப் புத்திக்கு எட்டல. அடுத்தவங்க அதைச் சொன்னா... நாங்க அரசியலுக்கு வருவங்கிற. வாழ வைக்கிற மக்கள் மேல அக்கறை இல்லாத உன்னோட போலி ஹீரோ வேஷம்... ஒ*ரி*ஜீனல் முகம் தெ*ரிஞ்சுப் போச்சு. உனக்காக... நீ கைத்தட்டல் வாங்குறதுக்காக டூப் போட்டு அடிபட்டு அவஸ்தைப்படுற தொழிலாளிகள் கொதிச்சுப் போய் இருக்காங்க. தொழிலாளிகள் முன்னாடி நீ பொது மன்னிப்பு கேட்கணும். இல்லைன்னா போராட்டம் நடத்துவோம். அய்யா அ*ஜீத்து... உன்னை அல்டிமேட் ஸ்டார் ஆக்கினதுக்கா ஆப்பு வைக்கப் பார்க்கிற?”

இப்படி அந்தப் பேட்டி முழுவதும் அ*ஜீத்தை ஒருமையில் திட்டியிருந்தார் ஜாக்குவார் தங்கம். மேலும், அவர் குற்றம்சாற்றியது போல் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்கக் கூடாது என்று அ*ஜீத் எங்கும் பேசவில்லை. அதேபோல் தொழிலாளிகளை அ*ஜீத் மதிப்பதில்லை என்று இதுவரை யாரும் புகார் சொன்னதில்லை. தயா*ரிப்பாளர் நஷ்டமடையும் போது சம்பளத்தை விட்டுத் தருவதில் அ*ஜீத்தை போல் யாரும் தாராளம் காட்டியதில்லை என்பதுதான் உண்மை.

அப்படியிருக்க தொழிலாளர்களுக்கு எதிராக அ*ஜீத் செயல்படுவதுபோல் ஜாக்குவார் தங்கம் அந்த வார இதழுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்தப் பேட்டி வந்ததிலிருந்து ஜாக்குவார் தங்கத்துக்கு அ*ஜீத் ரசிகர்களிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும், அவர்கள்தான் ஜாக்குவார் வீட்டில் இல்லாத போது காரை அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் என்றும் ஜாக்குவார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அ*ஜீத்தின் பேச்சு மீண்டும் வாதப் பொருளாகியிருக்கிறது.