நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை அட்டையில் போட்டு அவர்களுக்கு கலாச்சார காவலர்களிடமிருந்து கண்டனம் வாங்கித் தந்ததில் மேக்சிம் பத்தி*ரிகைக்கு பெரும் பங்கு உண்டு. இந்த மாதம் வெளியாகியிருப்பது மேக்சிம் பத்தி*ரிகையின் ஐம்பதாவது இதழ்.

ஐம்பதாவது இதழின் அட்டையில் இடம் பிடித்திருப்பவர் தீபிகா படுகோன். விமர்சனத்தை கிளப்பும் விதமாக இல்லாமல் நல்லவிதமாகவே தீபிகாவை படம் பிடித்திருக்கிறார்கள். இதழில் அவரது பிரத்யேக பேட்டியும் உண்டு. தன்னைச் சுற்றியுள்ள ஆண்களைப் பற்றி இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் தீபிகா.

இம்மாத இறுதியில் தீபிகா நடித்த கார்த்திக் காலிங் கார்த்திக் வெளியாகிறது. இந்த நேரத்தில் மேக்சிம் இதழில் வந்திருக்கும் தீபிகா படுகோனின் புகைப்படமும், பேட்டியும் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது.