No Recent Activity

6 Visitor Messages

  1. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா வருகிற ஜூலை 15ஆம் தேதி சேலம் மாநகரில் நடக்கவிருக்கிறது. அணைத்து கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும், மாநில, மாவட்ட நிர்வாகிகள்,மற்றும் பொதுமக்கள் அனைவரும் அணி திரண்டு வருக...
  2. சேலத்தில் முப்பெரும் விழா 100 வாகனங்களில் செல்ல தூத்துக்குடி சமக முடிவு:-

    ஜூலை 15ம் தேதி சேலத்தில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி முப்பெரும் விழாவில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 100 வாகனங்களில் செல்ல நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, பொருளாளர் நாசரேத் ராஜா, மாவட்ட பிரதிநிதி சரத்ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்சன், மகளிரணி செயலாளர் முத்துமதி, கலை இலக்கிய அணி செயலாளர் சரத்பாலா, மாநகர செயலாளர் பிரபாகர், பகுதி செயலாளர்கள் பாரதிவாசன், குரூஸ்திவாகர், கனிராமன், விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் சேலத்தில் ஜூலை 15ம் தேதி நடைபெறும் கட்சி முப்பெரும் விழாவில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 100 வாகனங்களில் கலந்துகொள்வது, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  3. my ♥ fav lyrics ♥

    "Hmm..Hmm..Hmm…
    on muthu muthu pechu en sangeethama achu
    un sundu viral theendayile ninu pochu yen moochu
    panju metha megam athil senju vacha thegam
    nee thoorathil ninna kuda pongiduthe yen mogam
    mutta kannu mozhi azhagil kothi kothi thinnavale
    siki kita en manasa oora vachu thovachavale
    aathukulla ammi kalla ponene……..

    oorukulla kodi ponnu yaraiyum nenaikkalaiye
    untham mugam partha pinne yethum pidikalaiye

    unnudaiya prvaiyila en udambu veguthadi
    pakathula nee iruntha en vayasu noguthadi"


  4. ஜனாதிபதி தேர்தல்:சமத்துவ மக்கள் கட்சி தலைவர் r .சரத்குமார் mla ,நாங்குநேரி mla எர்ணாவூர் நாராயணனும் வாக்களிப்பு

    ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நடந்தது. மதியம் 2 மணியளவில் தமிழகத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் r .சரத்குமார் mla ,நாங்குநேரி mla எர்ணாவூர் நாராயணனும் வாக்களித்தனர்..

    ஓட்டு போட்டு வெளியில் வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறும்போது, ""ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஓட்டளித்தது, பெருமையாக இருக்கிறது,'' என்றார்.
  5. அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில்
    கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க வீரர்களை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும். அல்லது அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் சேகரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மீனவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  6. நான்குநேரி அருகேயுள்ள தட்டான்குளம் நெடுஞ்சாலை ரோட்டில் சமக எம்எல்ஏ நாராயணன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

    மாநில அளவில் ஆண்டிற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு நெடுஞ்சாலை ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

    நான்குநேரி நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நான்குநேரி - உவரி நெடுஞ்சாலை ரோடு தட்டான்குளத்தில் நடந்தது.நான்குநேரி எம்எல்ஏ நாராயணன் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி, உதவி பொறியாளர் அக்பர்அலி, சமக நிர்வாகிகள் முத்துக்குட்டி, குமார், இளஞ்சேரன் உட்பட நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் கலந்து கொண்டன
Showing Visitor Messages 1 to 6 of 6
About sarathkumarfanzclub

Basic Information

Statistics


Total Posts
Total Posts
2
Posts Per Day
0.00
Visitor Messages
Total Messages
6
Most Recent Message
07-25-2012 12:10 PM
General Information
Last Activity
07-29-2012 05:22 AM
Join Date
07-24-2012
Referrals
0